கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரரும் பாலராவீர், மேனியும் சிவந்திடும்,
அருள்தரித்த நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே.
எனக்கு புரிந்தவரை:
உருத்தரித்த நாடியில் - சுவாசக் குழாயில் / மூக்கில்
ஒடுங்குகின்ற வாயுவைக் - மூச்சு காற்றை
கருத்தினால் இருத்தியே - கவனத்துடன் கையாண்டு
கபாலம் ஏற்ற வல்லிரேல் - உச்சம் தலையில் நிறுத்தினால்
விருத்தரரும் பாலராவீர், - வயோதிகரும் பாலர் ஆவார்கள்
மேனியும் சிவந்திடும், - தேகம் மிளிரும்
அருள்தரித்த நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே. - இறைவனின் பாதம் மட்டுமே என்றும் உண்மை.
Meaning as I understand:
The only 'naadi' (channel) that has a physical form is nose.
This 'naadi' carries air which when held with concentration moves to the top of the head ('Kabaalam')
On practising this everyday, even a old man would feel young and energetic,
the body would start shining.
Its only the feet of the divine which is an eternal truth.
தங்களின் முயற்சிக்கு சித்தர்கள் துணை இருப்பார்கள்,
ReplyDeleteகருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரரும் பாலராவீர், மேனியும் சிவந்திடும்,
இந்த பாடலில் உள்ள பொருளானது , காயகல்ப யோகத்தை குறிக்கும் சொல்லாகும். சித்தர் பாடலில் பொருளை உணர்ந்து கொள்வது சாதாரண விஷயம் அல்ல. காயகல்ப யோகத்தின் மூலம் இதனை நீங்கள் அறியலாம்.